மதுரை:
சீன பேராசிரியர் ஜாங் யுவே (Zhang yuwei) மதுரை பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கண்டு வியந்த நிலையில், ஜல்லிக்கட்டு குறித்து ஏராளமான ஓவியங்களை அசத்தலாக வரைந்துள்ளார்.
இந்த ஓவியங்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அரங்கில் கண்காட்சிக்கு வைத்திருந்தார். இதை கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்டு ரசித்து சென்றனர்.
சீனாவின் சியாங்கன் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பேராசிரிய ஜாங் யுவே (Zhang yuwei). இவர் தற்போது மதுரையில் முகாமிட்டு உள்ளார். அந்த பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்து வரும் ஜாங் யுவே அது தொடர்பாக ஏராளமான வண்ண ஓவியங்களை வரைந்துள்ளார்.
தனது ஓவியங்களை சீனாவில் கண்காட்சிப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ள ஜாங் யுவே, தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தி உள்ளார்.
இந்த கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்ததுடன், ஜாங் யுவேவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.