டிரம்ப் நிர்வாகம் சில மின்னணுப் பொருட்களுக்கு வரிகளிலிருந்து விலக்கு அளித்துள்ளது. இந்த முடிவு பொதுமக்களுக்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.
வரி உயர்வை திரும்பப் பெற உலக நாடுகள் அமெரிக்க அதிபர் டிரம்ப் பின்னால் சென்று லாலி பாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வரி உயர்வு அமெரிக்க மக்களை வெகுவாக பாதித்துள்ளதை அடுத்து பின்னங்கால் பிடரியில் அடித்தது போன்று இந்த வரி விலக்கை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன், மடிக்கணினி, குறைக்கடத்தி உற்பத்தி இயந்திரங்கள், பிளாட்-பேனல் மானிட்டர்கள் (LED திரைகள் போன்றவை) ஆகிய பொருட்களுக்கு வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் சீனா, கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மின்னணுப் பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்கின்றன.
இதனால் இதை வாங்கும் மக்களும் அதனை அமெரிக்காவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்களும் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.