கோலாலம்பூர்:

ட்சத்திரக் கலைவிழாவில் கலந்துகொள்ள மலேசாயா சென்ற ரஜினிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற இருக்கிறது. கலைநிகழ்ச்சிகளுக்கு முன்பாக நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் இன்று நடைபெற இருக்கின்றன.

இதில் ரஜினிகாந்துடன் இணைந்து சுமார் 150 நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் அங்கிருந்து நேரடியாக மலேசியாவுக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் மலேசியா சென்றார் ரஜினிகாந்த். அங்கு அவருக்கும் அவரது மனைவி லதாவுக்கும் பொனனாடை மாலை அணிவித்து சிறப்பான மரியாதை அளிக்கப்பட்டது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக,  விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களின்  இசை மற்றும் ட்ரெய்லர்  வெளியிடப்பட இருக்கிறது.

அதோடு ரஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் டீசரும் இந்த விழாவில் வெளியாகும் என்று  கூறப்படுகிறது.