சென்னை:
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் குற்றவாளி என்று நிரூபிக்க பட்டதோடு மருத்துவ நிபுணரான மீர் முஸ்தபா உசேன்க்கு, நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 14,000 அபராதமும் விதித்துள்ளது.

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் அவரது தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்களுக்காக, முன்பதிவு செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்ட, விமான வணிக வகுப்பு டிக்கெட்டுகளை பயன்படுத்தி மோசடி செய்த முறைகேடு குறித்து அலுவலகத்திற்கு தகவல் கிடைத்ததாக அரசு முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் இந்த வழக்கின் விசாரணைகளை தொடங்கியது.

ஏறத்தாழ 5.8 இலட்சம் ரூபாய் வரை இவர் மோசடி செய்ததாக விசாரணைகளுக்குப் பிறகு தெரிய வந்துள்ளது, 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த மீர் முஸ்தபா உசேன் மதிப்பிற்குரிய டாக்டர் பிசி ராய் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.