டெல்லி
தேசிய மனித உரிமை ஆணைய தல்வராக முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசுப்ரமணியன்சி தேசிய மனி0த உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆர்.சி.) தலைவராக, ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து உள்ளார்.
கடந்த 1958 ஆம் ஆண்டு ஜூன் 30-ல் பிறந்து சென்னை சட்ட கல்லூரியில் சட்டம் படித்தவரான ராமசுப்ரமணியன். 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி வழக்கறிஞர்கள் அமைப்பின் உறுப்பினரானார்.
அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 23 ஆண்டுகளாக பணியாற்றிய பின், 2006 ஆம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2009 ஆம்ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி நிரந்தர நீதிபதியானார்.
பிரியங்க் கனூங்கோ மற்றும் நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி (ஓய்வு) ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக ஆணையம் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ளது
[youtube-feed feed=1]