மோசடி வழக்கு பதியப்பட்டதை அடுத்து  . முன்னாள் எம்.பியும் நடிகருமான ரித்தீஷ் தலைமறைவாகிட்டதாக கூறப்படுகிறது.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னிடம் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி நடிகரும்   முன்னாள் எம்.பியுமான ரித்தீஷ் ஏழு லட்ச ரூபாய் வாங்கியதாகவும், ஆனால் வேலை வாங்கித்தரவில்லை என்றும் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது தராமல் இழுத்தடிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் ரித்தீஷை விசாரணைக்காக அணுக முயற்சித்தனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. விசாரணைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.