முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த செல்வராஜூக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

முன்னாள் எம்எல்ஏவும் திமுக செய்தித் தொடர்பு துணை செயலருமான கோவை செல்வராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வராஜ் திடீரென மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். மகன் திருமணத்தின்போது மாரடைப்பால் செல்வராஜ் மரணமடைந்த செய்தி ஆழ்ந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது என்று கூறியுள்ளார்.

கோவை செல்வராஜின் உடல் நாளை காலை கோவை கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.