கொழும்பு:
இலங்கையில் நடைபெற்ற விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்தினருக்கு இடையேயான இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர்.
இந்நிலையில், சரணடைந்த விடுதலைப்புலிகளில் சிலர் இலங்கை ராணுவத்திற்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும, ஆனால் அவர்களுக்கு சீருடை கிடையாது, இலங்கை ராணுவத்தினருடனான விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் இலங்கை ராணுவம் அறிவித்து உள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உக்கிரமான போர் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப் பட்டார். அதைத்தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது. அப்போது, சுமார் 10ஆயிரம் விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்ததாக கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர்களில் 11 பேர் உள்பட 50 பேர் ராணுவத்தில் இணைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று இலங்கை ராணுவம் தெரிவித்து உள்ளது. மேலும், வரும் காலங்களில் தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்துக்கு ஆள் எடுக்கப்படுவார்கள் என்றும் இலங்கை அரசு தெரிவித்து உள்ளது.