மும்பை
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் மாதவ் ஆப்தே இன்று மரணம் அடைந்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரரான மாதவ் ஆப்தே 1950 களில் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார். இவர் 67 டெஸ்ட் போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளார். இவர் மொத்தம் 3336 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தம் 6 சென்சுரிகள் அடித்துள்ளார்.
கடந்த 1952-53 கால கடத்தில் மாதவ் ஆப்தே 7 டெஸ்ட் பந்தயங்களில் விளையாடி உள்ளார். அவர் அப்போது 542 ரன்கள் எடுத்து சராசரியாக 49.27 ரன்கள் எடுத்து புகழ் அடைந்துள்ளார். தற்போது 86 வயதாகும் இவருக்கு வயது காரணமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது
அதையொட்டி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதவ் ஆப்தேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.