துரை

முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் கிரானைட் ஊழல் வழக்குவிசாரணைக்கு ஆஜராக மறுத்துள்ளார்.

நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகவும், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த மாபெரும் ஊழலை வெளியில் கொண்டு வந்தார்.

சகாயம் கடந்த 2014ம் ஆண்டில் அவர், குவாரிகளில் நடந்த சட்ட விரோத செயல்பாடுகள் பற்றி விசாரிக்க நீதிமன்றத்தால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தனது விசாரணையில் அவர், 1990ம் ஆண்டு முதல் நடந்த குவாரி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்து தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது.

இந்த வழக்கு விசாரணைக்கு அவர் சாட்சியம் அளிக்க மதுரை உயர்நீதிமன்றதில்ல் நேரில் ஆஜராகவில்லை.

சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு இதுபற்றி சகாயம் அனுப்பியுள்ள கடிதத்தில்,

‘பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராக வர வாய்ப்பில்லை. எனக்கு மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது’

என்று அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.