திருவனந்தபுரம்: கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்.
முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் கார் ஓட்டுநருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது: அவரின் கார் ஓட்டுநர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது, உறுதி செய்யப்பட்ட தகவல் நேற்றிரவு வந்தது. அதன் காரணமாக, கேரளா வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.
அக்டோபர் 31ம் தேதி அவருக்கு 77 வயதாகிறது. மார்ச் முதல் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து, வீட்டிலேயே இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இவ்வாறான சூழலை இதுவரை எதிர்கொண்டதே இல்லை என்று கூறி உள்ளனர்.