டெல்லி
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறார்.

பிரபல நடிகை ஸ்ம்ருதி இராணி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார். பிறகு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணியும் ஆற்றி வந்தார்.
ஸ்மிருதி பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 2014 முதல் 2024 வரை இரானி மத்திய அமைச்சராக இருந்த நிலையில் 2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தோல்வி அடைந்ததையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை
எனவே அவர் மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். தற்போது `கியூன்கி சாஸ் பி கபி பஹு தி: ரீபூட்’ என்ற பெயரில் தயாராகி வரும் தொடரில் ஸ்மிருதி இரானி துளசி விர்வானி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
Patrikai.com official YouTube Channel