சண்டிகர்
முன்னாள் அமைச்சர் பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைகிறார்.
சுமார் 40 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியின் பிரேந்தர்சிங் இருந்து வந்தார். அவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா, மற்றும் மகன் பிஜேந்தர் சிங் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அவருடன் அவருடைய மனைவியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதாவும் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்
இவர்கள். இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) காங்கிரசில் சேரப்போவதாக பிரேந்தர் சிங் கூறி னார். பிரேந்தர் சிங் உடைய மகன் பிஜேந்தர் சிங் ஒரு மாதத்துக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.