குவின்ஸ்லேண்ட்

பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஒரு ஆல்ரவுண்டர் ஆவார்.  அவர் பேட்டிங்குடன் நடுத்தர வேகம் சுழற்பந்து என பந்து வீச்சிலும் புகழ் பெற்றவர் ஆவார்.  ஆஸ்திரேலியாவுக்காக இவர் 198 ஒரு நாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

சைமன்ட்ஸ் 5088 ரன்கள் மற்றும் 138 விக்கட்டுகளை ஒரு நாள் போட்டிகளில் பெற்றுள்ளார்.  தவிர இவர் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1462 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.  இவர் 2003 மற்றும் 2007 உலகக் கோப்பை பந்தயங்களில் கலந்து கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

நேற்று இரவு அவர் டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நடந்த கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.  அவருக்கு தற்போது 46 வயதாகிறது.   இவருடைய கார் ஹெர்வி ரேஞ்ச் பகுதிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.   அப்போது இவர் ஒருவர் மட்டுமே காரில் பயணம் செய்துள்ளார்.

உடனடியாக மருத்துவர்கள் அவரை காப்பாற்றப் போராடி உள்ளனர்.   ஆயினும் பலன் இன்றி சைமண்ட்ஸ் உயிர் இழந்துள்ளார்.   அவருக்கு லாரா என்னும் மனைவியும் குளோ மற்றும் பில்லி என இரு குழந்தைகளும் உள்ளனர்.