மும்பை:
காதலித்து மணந்த கணவர், தன்னை இஸ்லாமிய மதத்துக்கு மாறும்படி அடித்து உதைப்பதாகவும், அதோடு இரண்டாவதாக தன்னைவிட மிக இளவயது பெண்ணை திருமணம் செய்து அவரையும் மதம் மாற்ற முயற்சிப்பதாகவும் மும்பையைச் சேர்ந்த மாடலிங் நடிகை ரேஷ்மி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மும்பை பந்திரா பகுதியை சேர்ந்த முன்னாள் மாடலிங் நடிகை ரேஷ்மி ஷாபாஸ்கர். வயது 42. , இவர் பந்திரா காவல் நிலையத்தில், புகார் அளித்துல்ளார்.
அதில், “ஆசிப் என்ற இஸ்லாமியரை நான் காதலித்து திருமணம் செய்தேன். அவர் என்னை இஸ்லாம் மதத்திற்கு மாற கட்டாயபடுத்தினார். நான் மறுத்தேன். இதையடுத்து அவர் என்னை பலமாக அடித்து உதைத்தார். இதனால் நான் படுகாயமடைந்துள்ளளேன். மதம் மாறச் சொல்லி வற்புறுத்தும்போதெல்லாம் கையில் கிடைக்கும் பொருளை கொண்டு என்னை கடுமையாக அடித்தார்.
இதனால் பயந்துபோய் தனியாக வாழ்கிறேன். ஆனால் எங்களுக்குப் பிறந்த மகனை நான் பார்க்கவிடாமல் தடுக்கிறார். மேலும், அவனை மற்ற மதங்களை வெறுக்கும் குணத்துடன் வளர்த்து வருகிறார். கடைசியாக என் மகனை நான் பார்த்தபோது, இந்து முறையை பின்பற்றுவதால் என்னை மோசமான பெண் என்று கூறினான். இதனால் நான் பெரிதும் மனமுடைந்துள்ளேன்.
தவிர என் கணவர் ஆசிப் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் வயதில் பாதி கூட நிரம்பாத பெண் ஒருவரை திருமணம் செய்து அவரையும் இஸ்லாம் மதத்திற்கு மாற கட்டாயபடுத்துவதும் எனக்கு தெரியவந்துள்ளது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் ஆசிப் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.