சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் காலமானார். இன்று காலை 10.12 மணிக்கு காலமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடல் நலக்குறைவால் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான இ வி கே எஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினரும், தற்போதைய ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக‘க இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவருடைய மகன் திருமகன் ஈவெரா, இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் திருமகனின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கட்சி பணிகளிலும் தொகுதி பணிகளிலும் ஈடுபட்டிருந்த இளங்கோவனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்து. தற்போது 75 வயதாகும் இளங்கோவன் உடல்நலம் பாதிப்பு காரணமாக, கடந்த நவம்பர் 27ஆம் தேதி இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சுத்திணறலுக்காக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் சுவாசிக்க மேலும் கஷ்டப்பட்ட நிலையில், அவருக்கு வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும், அவரது உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை அவரது உடல் ஏற்கவில்லை என்றும் எனினும் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை 10.12 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மறைந்த இவிகேஎஸ் இளங்கோவன், தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன். சென்னை மாநில கல்லூரியில் படித்த காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்தார். 1984ல் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தொடர்ந்த, 2004 மக்களவை தேர்தலில் கோபி., தொகுதியில் வென்று, 2009 வரை மத்திய இணையமைச்சராக செயலாற்றினார். 2000-02, 2014 – 16 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி வகித்துள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு: வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை!
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.