எகிப்து அருகே உள்ள சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற கப்பல் இன்று காலை அகற்றப்பட்டது.

400 மீட்டர் நீளமும் 50 அடி உயரமும் கொண்ட ‘எவர் கிவன்’ எனும் இந்த கப்பல் உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பலாகும்.

2,24,000 டன் எடையுடன் சூயஸ் கால்வாயில் கடந்த மார்ச் 23 ம் தேதி சிக்கிக்கொண்ட இந்த கப்பலால் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதோடு, பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள பொருட்களும் தேக்கமடைந்தன.

இந்நிலையில், தரை தட்டி நின்ற இந்த கப்பலின், முன்னும் பின்னும் சுமார் பத்து லட்சம் கன அடி மணல் தோண்டி எடுக்கப்பட்டு, பத்து இழுவை கப்பலைகளை கொண்டு இந்த கப்பல் இழுத்துவரப்பட்டது.

இதன் மூலம், சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்பட்ட தடை நீங்கியதாக தெரிகிறது.