eveng-full
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் பஷீர் என்ற கைதி மரணம் அடைந்துள்ளார்.
பூந்தமல்லி அருகே செந்தூர்புரத்தில் ஒய்வு பெற்ற சார்பதிவாளர் வீட்டில் 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
முதல்வர் உடல்நிலை குறித்து அறிய வேல்முருகன் சென்னை அப்போலோ மருத்துவமனை சென்றார்
தமிழக முதல்வர் நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் பிராத்தனை செய்து வருகின்றனர். அப்போலோ மருத்துவமனை முன்பு அதிமுகவினர் காலையில் தமிழ்மகன் உசேன் தலைமையில் முதல்வர் நலம் பெற தொழுகை நடத்தினர்.
தமிழக உள்ளாட்சி தேர்தலை அதிரடியாக ரத்து ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். அதை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு 15 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்கள் தலைமை நீதிபதி கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் கேரளா, கோவை இளைஞர்கள் 11 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 4வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முகநூல் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் ஐஎஸ் இயக்க ஆதாரவாளர்களுடன் கலந்துரையாடியது உட்பட சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வங்கிப் பணம் ரூ.1.2 கோடியுடன் ஓட்டுனர் இசக்கிப்பாண்டி மும்பைக்கு தப்பி சென்றுள்ளார். இசக்கிப்பாண்டியைப் பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளது.
30 நாட்களுக்கு பிறகு சத்தியமங்கலம் வழியாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று காலையில் ஓசூர் வழியாக கர்நாடகாவிற்கு தமிழக லாரிகள் இயக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடக அரசு பேருந்துகள் தமிழகத்திற்கு இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வங்கி ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்ட பணம் கள்ள நோட்டுக்கள் அல்ல என பாங்க் ஆப் பரோடா தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் பாமக சார்பில் வரும் 8-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் அன்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற் பூங்காவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மெடிபார்க் என்ற பெயரில் மருத்துவ உபகாரணத் தயாரிப்பு ஆலைகளை ஒரே இடத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன், சி.வி.சந்திரசேகர், உள்பட 42 பேருக்கு சங்கீத நாடக அகாதெமி விருது: குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார்
கொலை முயற்சி வழக்கில் ராஜேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2014ம் ஆண்டு நசியனுரில் இளம் பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கொலை தொடர்பாக புதிய சிசிடிவி படத்தை சிபிசிஐடி போலீஸார் வெளியிட்டுள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள நபர்கள் குறித்த விவரங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தமிழர்களை தாக்கியும், அவர்களின் சொத்துக்களை சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்ட கர்நாடக பாஜகவினரை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாமல் மறுப்பு தெரிவிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மிட்னாபூர் காவல் நிலையத்தில் 10 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்.
சர்வதேச அளவில் போதை மருந்து கடத்தல் தொடர்பாக விமானப்படை அதிகாரி மற்றும் பெங்களூருவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் ரூ.230 கோடி மதிப்புள்ள 220 கிலோ அமிபிடமைன் என்ற மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை ராமர் போல சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை ராவணன் போன்றும், டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேகநாதன் போன்றும் சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்து விவாதிப்பது ராணுவத்தை அவமதிக்கும் செயலாகும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
தாமாக முன்வந்து கருப்புப் பணத்தை அறிவிக்கும் திட்டத்தின்கீழ் ரூ.71,000 கோடிக்கும் அதிகமான பணம் வெளிவந்துள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் கல்வி நிலையம் (ஐசிஏஐ) தெரிவித்துள்ளது
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் மோடி சந்திப்பு
டெல்லியில் சோனியாகாந்தி-இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு
சிங்கப்பூர் பிரதமர் லி ஹிசியான் லூங் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார்.
பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 4 பெண்களை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
கடந்த வாரம் சீனா மற்றும் தைவானை பயங்கரமாகத் தாக்கியது ‘மேகி’ புயல். இதனால் சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் பலி; 17 பேரைக் காணவில்லை.
பிலிப்பைன்ஸுக்கு ஆயுதங்கள் தர மறுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா நரகத்திற்கு தான் போவார் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேசபக்தியை காட்டுவதாக நினைத்து ராணுவ தகவல்களை, ராணுவம் தொடர்பான டாங்கிகள் மற்றும் அதிநவீன ஆயுதங்களின் படங்களை சமூக வலைதளங்களில் பகிராதீர்கள் என்று இந்திய ராணுவம் குடிமக்களுக்கு எழுத்து மற்றும் ஆடியோ வடிவில் எச்சரிக்கை அனுப்பியுள்ளது
ஹேய்ட்டியைத் தாக்கிய மேத்யூ சூறாவளி , இந்த வறிய நாட்டின் தென் கடற்கரையோரமாக , மணிக்கு சுமார் 220 கிமீ வேகத்துக்கு மேல் வீசி, பயிர்களை அழித்தும், வீடுகளை நாசப்படுத்தியும் சென்றது
சமையல் கியாஸ் மானியம் பெற ஆதார் எண் கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு-சமையல் கியாஸ் மானியம் பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை ஆதார் எண் பெறாதவர்களுக்கு நவம்பர் 30–ந் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது
ரயில் தண்டவாளம் அருகே இளைஞரின் சடலம்: போலீசார் விசாரணை -திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் டைல்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 13ஆம் தேதி நண்பர்களுடன் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. திருவள்ளுர் ரெயில் நிலையம் அருகே  உடலில் வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. அவர் வினோத்குமார் என தெரிய வந்தது.
உறவினர் வீட்டு விழாவில் கலைஞர் – மு.க.அழகிரி பங்கேற்பு -சென்னை, தேனாம்பேட்டையில் நடைபெற்ற உறவினர் அமிர்தத்தின் பிறந்த நாள் விழாவில் திமுக தலைவர் கலைஞர், மு.க.ஸ்டாலின், க.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் பங்கேற்றனர்
துணை சபாநாயகர் மகன் ஏற்படுத்திய விபத்து – இளம்பெண்கள் பலி –  திருப்பூர் அருகே அவினாசியை அடுத்த பெருமாநல்லூரில் ஆதியூர் பிரிவில் துணை சபாநாயகர் மகன் நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது மற்றொரு காருடன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு இளம்பெண்கள் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்
தமிழக அரசை யார் வழி நடத்துகிறார்கள் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அலுவலகத்தில் மொத்தம் 4 தனி செயலாளர்கள் உள்ளனர். இவர்கள் மொத்தமுள்ள 54 துறைகளின் முக்கிய பணிகளையும் மேற்பார்வையிடுகிறார்கள். பின்னர் இந்த 54 துறைகள் பற்றி இந்த 4 தனிச்செயலர்கள், மாநில தலைமைச் செயலாளருக்கும், முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கும் அறிக்கை அளிப்பார்கள்.இந்த 6 பேரும் தான் அரசை வழி நடத்தி செல்லும் பொறுப்பை ஏற்றுள்ளனர் என அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும், மூத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோர் பெரும்பாலான நேரத்தை மருத்துவ மனையிலேயே செலவிடுகின்றனர்.
எகிப்திய தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மத தலைவரை வழக்கறிஞர் ஒருவர் ஷுவால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
துணை முதல்வர்  தேவையில்லை என்ற கருத்தை அதிமுக முன்னாள் மூத்த அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார் .இது குறித்து கூறிய அவர், முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஜெயலலிதா மருத்துவமனையிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். தமிழகத்துக்கு இடைக்கால முதல்வர் தேவை என்பது பொறுப்பற்ற பேச்சு எனத் தெரிவித்துள்ளார்
அம்மா, என்னம்மா ஆச்சு: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சினேகன் கவிதை! -பிரபல தமிழ் பாடலாசிரியர் சினேகன் முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் பெற்று விரைவில் வீடு திரும்ப கவிதை ஒன்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது
திமுகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திமுகவினர் சிலர், ஒரு சில உள்ளாட்சி அமைப்புகளில் திமுக வேட்பாளர்களை எதிர்த்தும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.அப்படி வேட்புமனு தாக்கல் செய்த திமுகவினர் தங்களது வேட்புமனுவைத் திரும்ப பெறாவிட்டால், திமுகவிலிருந்து உடனடியாக நீக்கப்படுவர். என்றார்
பிசிசிஐ அதிகாரிகளை நிர்வாணமாக கட்டிவைத்து ‘பின்னால்’ சவுக்கடி கொடுக்க வேண்டும் – கட்ஜூ அதிரடி -இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மேற்கொள்ள வேண்டிய கடுமையான சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அறிக்கையை முன்னாள் தலைமை நீதிபதி லோதா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது
மத்திய பிரதேசத்தில் சேஷார் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டது. கிராம மக்கள் விரைந்து வந்து தீ அணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
சசிகுமாரை கொலை செய்ய சிறையில் சதித்திட்டம் தீட்டியது சிபிசிஐடி விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  மேலும் சசிகுமாரின் மற்றொரு செல்போனையும் சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,861-க்கும், ஒரு சவரன் ரூ.22,888-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.46.10-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.43,065-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
3 நாள் அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்துள்ளார். இன்று அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது முன்னாள் பிரதமர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உடனிருந்தார்
எய்ட்ஸ் நோயாளிகள் புறக்கணிப்பை தடுக்கக் கோரும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் காஞ்சிபுரம் அருகே செங்கல்பட்டில் மருத்துவ பூங்கா அமைக்கவும், ஹெச்.எல்.எல். லைஃப்கேர் நிறுவனம் துணை ஒப்பந்த அடிப்படையில் 330.10 ஏக்கரில் பூங்கா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மிட்னாபூர் காவல் நிலையத்தில் 10 நக்சலைட்டுகள் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக நக்சலைட்டுகள் சரணடைந்து வருவது குறிப்பிடத்தக்கது
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 15 பேர் இன்று பதவியேற்றனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
பூந்தமல்லி அருகே செந்தூர்புரத்தில் ஒய்வு பெற்ற சார்பதிவாளர் வீட்டில் 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சார்பதிவாளர் ராமமூர்த்தி வீட்டின் பூட்டை உடைத்து 80  சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கிழக்கு பகுதியில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியானார்கள். 17 பேரை காணவில்லை. சம்பவ இடத்தில் மீட்பு பணி நடந்து வருகிறது மாயமான நபர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதியை கடந்த வாரம் பெரும் புயல் தாக்கியது. இதனால் 3.15 லட்சம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்
30 நாட்களுக்கு பின் கர்நாடகாவுக்கு தமிழக லாரிகள், கார்கள் இயக்கம்
அக்டோபர் 8 ம் தேதி முதல் 13 நாட்களுக்கு தினமும் 18 மணி நேரம் லாகூர் மற்றும் கராச்சி விமானதளங்கள் மூடப்படுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட், பண்டிகை காலத்தை முன்னிட்டு “பிக் பில்லியன் டே” விற்பனையை அக்டோபர் 3ம் தேதி நடத்தியது. இதில் ஒரே நாளில் ரூ.1400 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.ஒரே நாளில் ஸ்மார்ட்போன் பிரிவில் அதிகமானவர்கள் ஆர்டர் செய்ததன் காரணமாக இந்த அளவிற்கு விற்பனை அதிகரித்ததாகவும், 2015ம் ஆண்டு 5 நாட்களில் ரூ.2000 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் பிலிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய பாதுகாப்புக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. உள்நாட்டு பாதுகாப்பு குறித்து இக்கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கல்யாண் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் தாக்குதல் நடத்தினர். ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார். இதனால் கிராம பகுதியில் வசிப்பது அச்சமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க மீண்டும் லண்டனிலிருந்து டாக்டர் ரிச்சர்ட் பியெல் சென்னை வந்த நிலையில், மற்றொரு டாக்டரையும் அவர் உடன் அழைத்து வந்துள்ளதாக தகவல்
தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமாகவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். ஆனால் அதற்காக குழந்தைகளுக்கு அலகு குத்தி கொடுப்மைபடுத்துவது தவறு–டாக்டர் ராமதாஸ
உள்ளாட்சித் தேர்தலை ஒழுங்காக நடத்த வேண்டும் என்று தான் நீதிமன்றம் சென்றோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்பது திமுகவின் நோக்கம் இல்லை
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில், நாகை தெற்கு மாவட்டம், அதிமுகவைச் சேர்ந்த வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.வி.காமராஜ் திமுகவில் இணைந்தார்
ரெயிலில் வங்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், மும்பையில் தனிப்படையினர் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.