ட்டி

நேற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற போதும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறையாமல் இருந்தது.

நீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலமான ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்குத் தினசரி ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கமாகும்.  இடையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.  தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் மீண்டும் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

ஊட்டிக்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு அன்று அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இருப்பினும் தேர்தல் நடைபெறும் தினத்தன்று சுற்றுலாப் பயணிகள் வருகை மிகவும் குறைவாகவே இருக்கும்.  தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன.  எனவே ஊட்டிக்கு வரும்ம் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்ப்பு  இருந்தது.

தவிர தேர்தல் கட்டுப்பாடு காரணமாக வெளிமாநில சுற்றுலாப்பயணிகளும் ஊட்டி வருவதைத் தவிர்ப்பார்கள் எனவும் கூறப்பட்டது.   இதற்கு மாறாக நேற்று ஊட்டியில் ஏராளமான சுற்றுலாப பயணிகள் வந்து குவிந்துள்ளனர்.   வழக்கமான வார இறுதி நாட்களில் காணப்படுவதைப் போல் சுற்றுலா பயணியர் கூட்டம் ஏராளமாக காணப்பட்டது.  இதனால் அங்குள்ள வர்த்தகர்கள் மிகவும் மகிழ்வடைந்துள்ளனர்.