ண்டன்

நோயால் தவிக்கும் குழந்தையை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லக் கூடாது என ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த கிரிஸ் கார்ட், கொன்னி யேட்ஸ் தம்பதிகளின் 10 மாதக் குழந்தை சார்லி.  இந்தக் குழந்தைக்கு பிறவியிலேயே உள்ள ஒரு நோயால் மூளை மற்றும் தசைகள் இயக்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.   இதற்கான சிகிச்சை இங்கிலாந்தில் இல்லை.  அமெரிக்காவில் மட்டுமே உள்ளது.  மருத்துவ செலவுக்கான பணத்தை ஏற்பாடு செய்த பெற்றோர், நோயுற்ற குழந்தையை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கோரி விண்ணப்பித்தனர்.

ஆனால் இங்கிலாந்து மருத்துவர்கள், சார்லி அமெரிக்கா சென்றாலும் குணமாக வாய்ப்பில்லை எனவும் ஆயுளுக்கும் துன்பம் அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவித்தது.  இந்த விண்ணப்பம் ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றத்தால் விசாரிக்கப்பட்டது.

தீர்ப்பில் சார்லி அமெரிக்கா சென்றாலும் ஆயுள் மட்டுமே நீடிக்கும் என்பதால் ஆயுளுக்கும் துன்பம் அனுபவிக்க வேண்டி இருக்கும் எனத் தெரிந்தே சிகிச்சைக்கு அனுமதி அளிக்க முடியாது என கூறப்பட்டது.

மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆகிய இருவருடைய வாதங்கள், மற்றும் பெற்றோரின் மனநிலை ஆகியவைகளை கருத்தில் கொண்டே இந்த தீர்ப்பு வழங்கியதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது பற்றி சில சமூக ஆர்வலர்கள், ”மனித உயிரின் மதிப்பு தெரிந்த எவராலும் இந்த தீர்ப்பை ஒப்புக் கொள்ள முடியாது.  பெற்றோருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே இதை கருத முடிகிறது.  இது அநாகரிகமான தீர்ப்பு.  இதிலிருந்து நாம் தெரிந்துக் கொள்வது சட்டம் வேறு, மனிதநேயம் வேறு என்பதே” எனக் கூறியுள்ளார்கள்