வாஷிங்டன்

மேலும் 6 மாதங்களுக்கு ரஷ்யா மீதான பொருளாதார தடையை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு எடுத்துள்ளது.

 

சுமார் 150 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது.   இதனால் உக்ரைனில் உள்ள அனைத்து விமான தளங்கள், முக்கிய நகரங்கள் உள்ளிட்ட பல தரைமட்டமாகி உள்ளன.  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்கள் போர் அச்சத்தால் நாட்டை விட்டு வெளியேறி கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து  கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  மேலும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த பொருளாதாரத் தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐரோப்பிய  ஒன்றியம் முடிவு எடுத்துள்ளது.   இதன்படி ரஷ்யா மீதான நிதி, தொழில் நுட்பம், தொழில், போக்குவரத்து, உள்ளிட்டவை மீதான பல கட்டுப்பாடுகள் மேலும் 6 மாதங்களுக்குத் தொடர உள்ளன.