பாரிஸ்

ரோப்பிய யூனியன் தலைவர் மைக்கேல் பார்னியர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளார்.

சீனாவுக்கு அடுத்தபடியாக  அதிக அளவில் பாதிப்பு அடைந்த  இத்தாலி நாட்டின் மூலமாக ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.   ஐரோப்பிய யூனியன்  தலைவர் மைக்கேல் பார்னியர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

மைக்கேல் பார்னியர் தனது டிவிட்டர் பக்கத்தில்,

“நான் கொரோனா தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான் நலமாகவும் வலுவாகவும் இருக்கிறேன்.

நான் எனது மருத்துவக்  குழுவினர் வழங்கும் அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றி வருகிறேன்.

ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களும், தற்போது பாதிப்பு அடைந்து தனிமைப் படுத்த பட்டவர்களும் இணைந்து செயல்படுவோம்”

என பதிந்துள்ளார்.