ஈரோடு: ஈரோட்டில், வாக்குப்பெட்டி, அதாவது இவிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ஸ்டிரிங் அறையில் செயல்பட்டு வந்த சிசிடிவி காமிரா 2வது முறையாக மீண்டும் ஆஃப் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வெயில் காரணமாக காமிரா ஆஃப் ஆனதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில், . உள்ள 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு  நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் அந்தந்த தொகுதியில் உள்ள கல்லூரிகளில்  24மணி நேர சிசிடிவி காமிரா கண்காணிப்புடன், காவல்துறையினரின் மூன்றடுக்கு பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது.  இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மட்டுமின்றி,  அரசியல் கட்சி நிர்வாகிகளும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் நீலகிரி தொகுதியில் உள்ள வாக்கு பதிவு இயந்திரம் உள்ள அறையில் திடீரென அனைத்து சிசிடிவி கேமராக்களும் செயலிழந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, திமுக வேட்பாளர் ராஜாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என புகார் கூறப்பட்ட நிலையில், சிசிடிவி காமிராக்கள் திடீரென ஆஃப் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த ஆட்சியர் அருணா,  அதிக வெயிலின் காரணமாகவும், தொடர்ந்து சிசிடிவி இயங்கி வருவதாலும் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். ஆட்சியரின் இந்த விளக்கம், தொழில்நுட்ப வல்லுநர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுட்ததியது. இதனை அடுத்து அடுத்த ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் சிசிடிவி சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டது.

இதனையடுத்து அடுத்த ஒரு சில தினங்களில் ஈரோட்டில் உள்ள வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாக்கப்பட்ட வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள சிசிடிவி கேமரா நள்ளிரவு நேரத்தில் திடீரென  ஆப் ஆனது. ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள. இங்குள்ள ஸ்டிராங் ரூமில் உள்ள காமிராக்கள் செயலிழந்தது. இது, சரி செய்யப்பட்டு செயல்பாட்டை தொடங்கியது. இதன் காரணமாக அரசியல் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஈரோடு தொகுதியில் உள்ள வாக்கு பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் சிசிடிவி கேமரா ஆஃப் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 மணி முதல் சிசிடிவி இயங்காத நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்களை அழைத்து சரி செய்யும் பணி நடைபெற்றது. சிசிடிவி கேமராக்களை வேட்பாளர்கள், பூத் ஏஜென்டுகள் கண்காணிக்கும் அறையில் பழுது ஏற்பட்டு சர்வர் இயங்கவில்லையென கூறப்பட்டது. இதனையடுத்து பழுது பார்க்கும் பணி நிறைவடைந்து மீண்டும் சிசிடிவி கேரமா செயல்பட தொடங்கியுள்ளது.

வெயில் காரணமாக சிசிடிவி காமிராக்கள் இயக்காமல் ஆஃப் ஆவதாக கூறப்படுவது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சாதாரணமாக வீடுகள், அலுவலகங்களில், தெருக்களில் வைக்கப்படும் சிசிடிவி காமிராக்கள், பல மாதங்களாக ஓய்வின்றி வேலைசெய்து வரும் நிலையில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளில் மட்டும் சிசிடிவி காமிராக்கள் அடிக்கடி ஆஃப் ஆவது வியப்பை ஏற்படுத்திதுகிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் தொழில்நுட்ப வல்லுநர்களின் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.