மதுரை தமிழரான எர்ணாகுளம் கலெக்டர், கேரளாவில் MGR என பிரபலமாக அறியப்படும் M.G.ராஜமாணிக்கம், ஜிஸாவின் தாயாரின் துயரத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஜிஸாவின் குடும்பத்திற்கு நிதி திரட்டும் முயற்சியில் நேரடியாக ஈடுபட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக , நான் ஜிஷாவின் குடும்பத்தினருடன் உள்ளேன். நான் பார்த்த வரையில், ஒரு சாரார், ஜிஷவின் தாயாரை சந்திக்க வரும்போதே புகைபடக்காரர் மற்றும் வீடியோகிராபருடன் வந்து விளம்பரம் தேடிக் கொள்கின்றனர்.
மற்றோர் சாரார் வாய் கிழிய பேசுகின்றனர், வாக்குவாதம் செய்கின்றனர், கூச்சல் போடுகின்றனர்
மற்றும் ஒரு சாரார் சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுகின்றனர்.
மற்றும் சிலர், வாய்மூடி வேடிக்கை பார்க்கின்றனர்.
இது எதுவுமே ஜிஷாவின் குடும்பதிற்கு உதவப் போவதில்லை. எல்லோரும் 10 நாட்களில் தங்களின் கவனத்தை மற்றொரு பிரச்சனையை நோக்கி திருப்பிக் கொள்வர்.
பல்வேறு தரப்பினர் நிதிஉதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
ஜிஷாவின் குடும்பத்திற்கு நிதிஉதவி செய்ய விரும்புவோரின் வசதிக்காக வங்கிக்கணக்கு ஒன்று ஜிஷாவின் தாய் மற்றும் மாவட்ட கலெக்டர் இணையாய் பயன்படுத்தும் விதமாக துவங்கப் பட்டுள்ளது.
இணைக்கணக்கு:
எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர்
மற்றும் ராஜேஷ்வரி (The District Collector, Ernakulam & Mrs.K.K.Rajeswari)
கணக்கு எண்: 35748602803
IFSC எண்: SBIN0008661
வங்கி: பாரத ஸ்டேட் வங்கி ( State Bank of India) பெரும்பாவூர்.
இவரது இந்தப் பதிவிற்கு 28 ஆயிரம் லைக்குகள், 17,000 பகிர்வுகள் மற்றும் 16,000 பின்னூட்டங்களும் இடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நிதிஉதவியாய் மாறியுள்ளதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
கேரள மாணவி ஜிஷாவின் படுகொலை வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்ற போதும் கூட பாலியல் வன்கொடுமைக்கு எதிரான முயற்சிகளில் நிலவும் சாதீய பாரபட்சத்தை சுட்டிக் காட்டுவதும் இந்த நேரத்தில் மிக அவசியமானதாகும். நிர்பயா சட்டம் (பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்) அமலுக்கு வந்த பின்னரும் கூட, ஆணாதிக்க பாலியல் வெறி கட்டுப்பட்டதாக தெரியவில்லை. இந்த ஆணாதிக்க வெறி அடித்து நொறுக்கப்பட வேண்டிய அதே வேளையில், சமூகமானது சனநாயகப்பட வேண்டியுள்ளது. வீட்டிலும் சமூகத்திலும் பெண்கள் மீதான மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு உயர்த்தப்படுவதற்கான பண்பாட்டுப் புரட்சி அவசியமாகிறது.