டெல்லி
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார்.

நேற்ற்ஜ் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை போர்த்தினார்.
பிறகு இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் அவருடன் சென்றிருந்த மூத்த நிர்வாகிகள், எம்.பி.க்களும் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளனர்.
கட்சியின் முக்கிய தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர். 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மந்திரி அமித்ஷா உடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Patrikai.com official YouTube Channel