ஓமலூர்
சசிகலா மற்றும் ஓ பி எஸ் மீண்டும் அதிமுகவில் இணைக்கப்படுவார்களா என்னும் கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
நேற்று ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள பாஜக தலைமை அழுத்தம் கொடுக்கிறதாமே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
எடப்பாடி பழனிசாமி இதற்கு,
”நீங்களாகவே ஒரு கற்பனை செய்து கொள்கிறீர்கள். காது மூக்கு கண் வைத்து எதையாவது சொல்கிறீர்கள். தினந்தோறும் அதிமுக பற்றி செய்தி வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்களாகவே கேள்வி கேட்கிறீர்கள். 100% அப்படி எதுவும் இல்லை. திரும்பத் திரும்ப பலமுறை சொல்லிவிட்டோம்.
அதிமுக மிகச் சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்லும் நபர்கள் யாரையும் இந்த இயக்கத்தில் சேர்த்துக் கொள்வதாக இதுவரை எந்தத் திட்டமும் இல்லை.”
என பதில் அளித்துள்ளார்.