சென்னை:
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு ரூ.15 லட்சம் பரசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், இன்று கோமதி மாரிமுத்துவிடம் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-சின் கிரின்வேஸ் சாலையில் உள்ள வீட்டில், முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி முன்னிலையில், கோமதிக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
முன்னதாக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு சால்வை போர்த்திய கோமதி, பரிசு தொகை பெற்றதும் செய்தியாளர்களிடம் பேசும்போது, எடப்பாடி அரசு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி யுள்ள 3 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு நன்றி தெரிவித்தார்.

Patrikai.com official YouTube Channel