டெல்லி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.10 விழுக்காடாக குறைக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரியக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும் மோடி அரசின் நடவடிக்கையால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது- இந்த நிலையில்  2021-22ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 விழுக்காட்டில் இருந்து 8.10 விழுக்காடாகக் குறைத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரியக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது  கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டிவிகிதம் நடப்பு நிதியாண்டில் குறைக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, 2020-21ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு டெபாசிட்டுகளுக்கான 8.5 விழுக்காடு வட்டி விகிதம் மார்ச் 2021ல் மத்திய அறங்காவலர் வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அற்போது குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.