டில்லி:

டப்பு நிதியாண்டுக்கான பிஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் உள்ள பணத்துக்கு நடப்பு ஆண்டுக்கான வட்டியை நிர்ணயம் செய்ய பிஎப் அறக்கட்டளை வாரிய கூட்டம் கூடியது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் தலைமையில் நேற்று இக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை கங்க்வார் சந்தித்தார். அப்போது அவர், “நடப்பு 2017-18 நிதியாண்டுக்கான பிஎப் 8.55 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.586 கோடி வழங்க வேண்டி இருக்கும்.  கடந்த வருடம் 8.65 சதவீதமாக இருந்தது. அப்போது வட்டியாக ரூ.695 கோடி அளிக்கப்பட்டது. . நிதியமைச்சக ஒப்புதலுக்கு பிறகு வட்டி தொழிலாளர் கணக்கில் வரவு வைக்கப்படும். பங்கு முதலீட்டில் 8% லாபம் கிடைத்ததால் இதை வழங்க முடியும்.

அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதிக்கு ரூ.7.6 சதவீதம் அளிக்கப்படுகிறது.
இதை விட இந்த வட்டி அதிகம்தான். நிறுவனத்தில் 10 தொழிலாளர்கள் இருந்தால் கூட பிஎப் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பிஎப் வட்டி தொடர்ந்து மூன்றாவது வருடமாக  குறைந்துள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தையில் இதுவரைசுமார் ரூ.44,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]