“ஒட்டு மொத்த நாடும் உங்களுக்கு பக்கபலமாக நிற்கிறது” வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து ராகுல் காந்தி பதிவு.

ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியை வினேஷ் போகாத தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

100 கிராம் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி அவரது எடை பிரிவான 50 கிலோ பிரிவில் விளையாட தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் உடல் எடை குறைவதற்காக இரவு முழுவதும் உடற்பயிற்சியில் ஈடுபட்ட வந்த வினேஷ் போகத் நீர் சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கும் வருத்தம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி “உலகின் முன்னணி மல்யுத்த வீரர்களைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகத், தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

https://x.com/RahulGandhi/status/1821102847578046716

ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

வினேஷ் விட்டுக்கொடுப்பவர் அல்ல, அவர் மீண்டும் களத்தில் வலுவாக வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

நாட்டிற்காக பெருமை சேர்த்திருக்கும் வினேஷ் போகத்துடன் முழு நாடும் துணை நிற்கும்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கம்… இந்தியாவின் தங்க கனவு பறிபோனது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி…