
ரவுடி பேபி பாடல் மூலம் பிரபலமானவர் பின்னணி பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் மகளான இவர் பாடகர் அறிவுடன் இணைந்து என்ஜாய் எஞ்சாமி என்ற சுயாதீன பாடலை பாடியுள்ளார்.
சுயாதீன கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் தயாரித்திருக்கும் இந்தப் பாடலை அமித் கிருஷ்ணன் படமாக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மார்ச் 7-ம் தேதி வெளியான இந்தப் பாடல் இதுவரை 25 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதோடு 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்துள்ளது.
[youtube-feed feed=1]