லண்டன்
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து மிகத் தாமதமாக உணர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தொடங்கி இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. பல ஐரோப்பிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இங்கிலாந்து நாட்டில் இந்த வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு செய்துள்ள விஞ்ஞானிகள் குழு அளித்துள்ள அறிக்கையில், “இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருக்காது என நம்பப்பட்டது. எனவே சந்தேகத்துக்குரியவர்களை அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மட்டும் அரசு சுகாதாரத் துறை மேற்கொண்டது. ஆனால் அதை மீறி வைரஸ் பரவுவதைத் தடுக்க தவறி உள்ளது.
கொரோனாவின் தாக்கத்தை வெகு சில நாட்களுக்கு முன்பே உணர்ந்துள்ளது. இது மிகவும் தாமதமாகும், அதற்குள் இந்த கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி உள்ளது. இனி உடனடியாக மருத்துவ நடவடிக்கைகள் எடுக்காவிடில் இத்தாலியைப் போல் இங்கிலாந்திலும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸால் உயிரிழக்க நேரிடலாம்.”எனத் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]