சென்னை: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், உணவு இடைவேளை வரையிலான நேரத்தில், வெறும் 116 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து.
நேற்றைய நிலவரப்படி, 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, இன்று 4ம் நாள் ஆட்டத்தில் களமிறங்கியது. டான் லாரன்சும், ஜோ ரூட்டும் ஆடவந்தார்கள். ஆனால், அஸ்வின் பந்தில் லாரன்ஸ் ஸ்டம்பிட் செய்யப்பட்டார்.
பிறகு, 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் அஸ்வின் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர், ஓலி போப் அக்ஸார் படேல் பந்தில் அவுட்டாக, பென் ஃபோக்ஸை குல்தீப் யாதவ் காலி செய்தார்.
இடையில், உணவு இடைவேளை குறுக்கிட்டது. தற்போது கேப்டன் ஜோ ரூட் மட்டும் 90 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து நாட்அவுட்டாக உள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, அஸ்வின் மற்றும் அக்ஸார் தலா 3 விக்கெட்டுகளும், குல்தீப் 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர். இப்போட்டியில், இந்தியா வெல்லும்போது, மேன் ஆப் த மேட்ச் விருது, அஸ்வினுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.