சென்னை: 482 ரன்கள் என்ற இலக்கை துரத்திவரும் இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில, கைவசம் 7 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், அந்த அணி, இந்தியப் பந்துவீச்சை சமானித்து 429 ரன்களை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த அணியின் துவக்க வீரர் ஜோசப் பர்ன்ஸ் 25 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் டாம் சிப்ளி 3 ரன்களுக்கு அக்ஸார் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர், நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய ஜேக் லீச்சையும் அக்ஸார் படேல் அவுட்டாக்க, கேப்டன் ஜோ ரூட் களமிறங்கினார்.
டான் லாரன்ஸுடன், ஜோ ரூட் களமிறங்கிய சிறிதுநேரத்தில், 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தியாவை விட 429 ரன்கள் பின்தங்கியுள்ளது.