
அகமதாபாத்: இந்தியாவிற்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட்டில், 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 10 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
அந்த அணியின் துவக்க வீரர் ஜாக் கிராலே 5 ரன்களுக்கு அஸ்வினிடம் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோ, ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் டக்அவுட் ஆனார்.
தற்போது, டாம் சிப்லியுடன், கேப்டன் ஜோ ரூட் இணைந்திருக்கிறார். ஆடுகளம் தற்போது பந்துவீச்சிற்கு அதிக சாதகமாக மாறியுள்ள நிலையில், ஏற்கனவே கணிசமான ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி தாக்குப்பிடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel