லண்டன்
கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என இங்கிலாந்து தலைமை செவிலியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிக அளவில் உள்ளது. மரணம் அடைந்தோரில் இருவர் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் ஆவார்கள். அரீமா நஸ்ரின் மற்றும் ஐமீ ரூர்க்கி என்னும் பெயருடைய அந்த இரு செவிலியர் மரணத்துக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த இரங்கல் கூட்டத்தில் கலட்ந்துக் கொண்ட தலைமை செவிலியர் ரூத் மே, “இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரு செவிலியர்களான அரீமா நஸ்ரின் மற்றும் ஐமி ரூர்க்கி ஆகியோருக்கு இரங்கலைத் தெரிவிக்கிறேன். மக்கள் இவர்கள் மரணத்தை மனதில் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன்.
இந்த வார இறுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் வெளியே செல்ல மிகவும் விரும்புவார்கள். ஆனால் நான் உங்கள் அனைவரையும் ஐமி மற்றும் அரீமாவை நினைவு கூர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்காகத் தயவு செய்து நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.