சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் பாடத்திட்டம் உலகிலேயே மிகச்சிறந்த பாடத்திட்டமாக மாற்றப்படும் என்றும் 25 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளதாகவும்,  தொழிற்துறையில் 2.1 மில்லியன் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில்  வளரும் தொழில் நுட்பத்திற்கேற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்த கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இஅதில் கலந்துகொண்ட தமிழ்நாடு  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  சிறப்புரை ஆற்றினார். அவருடன்  உயர்கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் லஷ்மி பிரியா உள்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித் அமைச்சர், தமிழ்நாட்டில்  பொறியியல் பாடத்திட்டம்   25 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட உள்ளதாகவும்,  அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் உலகத்தரத்துக்கேற்ப மாற்றப்பட உள்ளதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டின் தொழிற்துறையில் 2.1 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும்போது, அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்  என்று கூறியவர், அதற்கு தகுந்தாற்போல பாடத்திட்டங்களும்,   படிக்கும்போதே வேலைவாய்ப்புக்கான பயிற்சியை மேற்கொள்ளும் வகையிலும் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் என்றார்.

தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் தொழிற்திறனை வளர்த்தெடுக்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்றவர்,  பாடத்திட்டத்தை  எவ்வாறு மாற்றவேண்டும் என்கிற அடிப்படையில் தொழில்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை இன்று நடைபெறுவதாக கூறிய அவர்,  வரும் கல்வியாண்டு முதலே இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.