டெல்லி:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஆகஸ்டு 16ந்தேதி திறக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ஏஐசிடிஇ அறிவித்து உள்ளது.
மேலும், பி.இ., பி.டெக் படிப்புக்கான கவுன்சிலிங் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும்,  2, 3, 4-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் 16 முதல் தொடங்க வேண்டும் என்று அறிவித்து உள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று எந்தவித அறிவிப்பும் வெளிவராத நிலையில், பொறியியல் கல்லூரிக நாடு முழுவதும்  ஆகஸ்ட் 16ம் தேதி முதல்  திறக்கலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (AICTE) அறிவுறுத்தியுள்ளது.
 அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (AICTE) 62-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து புதிய அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.
அதன்படி,   நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக அங்கீகாரத்தை ஜூலை 15-ந்தேதிக்குள் வழங்கவேண்டும். ஆகஸ்ட் 30-க்குள் முடிக்க வேண்டும் .
பொறியியல் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை ஆகஸ்ட் 30-தேதிக்குள் முடிக்க வேண்டும்.
2-ம் கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை செப்டம்பர் 10-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்
. கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கையைச் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் முடித்துவிட வேண்டும்.
ஏற்கனவே பொறியியல் படிப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கலாம்.
புதிதாக பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குச் செப்டம்பர் 15-ந்தேதி முதல் வகுப்புகளை தொடங்கலாம்.
கல்வியாண்டு மாற்றம் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் முதுகலை டிப்ளமோ, முதுகலை சான்றிதழ் உள்ளிட்ட படிப்புகளுக்கான வகுப்புகளை ஜூலை 15-ம் தேதி முதல் தொடங்கலாம்.
இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் முடிக்கக வேண்டும்.
மேலும், நடப்பு கல்வியாண்டு என்பது ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை என மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.