சென்னை: சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துணைராணுவத்தினர்  பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.   இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் சென்னை வேளச்சேரியில் தொழிலதிபர் பிஷ்னோய் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதேபோல அடையாறில் உள்ள டாக்டர் இந்திரா என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேற்கு மாம்பலம் உள்பட மேலும் 2 பகுதிகளில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.