சென்னை:  வெளிநாட்டு கார் இறக்குமதி தொடர்பாக, சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதுபோல கொச்சியில் உள்ள நடிகர்கள் மம்முட்டி, பிரித்விராஜ் வீடுகளிலும் சோதனை செய்து வருகின்றனர்.

நடிகர் துல்கர் சல்மான்  பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செயப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில்,   இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

கார் இறக்குமதி செய்ததில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் கிரீன்வே சாலையில் உள்ள துல்கர் சல்மானிற்கு சொந்தமான வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது தயாரிப்பு நிறுவன அலுகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

மம்மூட்டி, பிரித்விராஜ் வீட்டிலும் இ.டி. ரெய்டு

இதேபோன்று, கொச்சியில் உள்ள மலையாள நடிகர்களான மம்முட்டி மற்றும் ப்ருத்விராஜ் ஆகியோர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செயப்பட்ட விவகாரத்தி சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.