ராஞ்சி:  நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின்  ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜார்கண்ட மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது, நிலக்கரி சுரங்க ஊழல், நிப அபகரிப்பு குற்றச்சாட்டு, பண மோசடி என பல வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில்,  ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி தொடர்ந்த நடந்த நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதில் ஹேமந்த் சோரனை கடந்த கடந்த 2024 ஜனவரி 31-ம் தேதி இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவர் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கஇந்த வழக்கில் ஹேமந்த் சோரன் உட்பட ஐந்து பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில்,  முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான ரூ. 31 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருப்பதாகவும், அனால், இந்த சொத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சோரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அதாவது, ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ள ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். இந்த நிலம் ரூ.31.07 கோடி மதிப்பிலானது. கடந்த 2010-11-ம் ஆண்டு முதலே இந்த சொத்தை சொந்தமாக வைத்திருக்கும் சோரன், அதை மோசடியாக பெற்றுக்கொண்டதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது. இந்த சொத்தை பறிமுதல் செய்ய அனுமதியும் கோரப்பட்டுள்ளது.

சோரன் மீதான நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை புறக்கணித்த ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், “முடிந்தால் கைதுசெய்யுங்கள்” எனச் சவால் விட்டிருந்த நிலையில், ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு, பதவி இழந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.