நாம் தினம்தோறும் பயன்படுத்தும் நாட்காட்டிகளைப்போல் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நாட்காட்டிகளைப் பயன்படுத்துகிறது. ஆனாலும் உலகம் முழுதும் பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டி முறை பயன்படுத்தப்படுகிறது.

பண்டைய காலத்தில் நாம் தமிழக மூவேந்தர்கள் கல்வெட்டில் எழுதும் குறிப்புகள் என்னவாக இருக்குமென்றால் இந்த அரசரின் இத்தனையாவது ஆட்சிக்காலத்தில் இந்த கோயில் கட்டப் பட்டது என்பது போன்ற குறிப்புகள் இருக்கும். ஆனால் இப்போது  நாம் அப்படி பயன்படுத்துவ தில்லை. ஆனால் பொதுவாக குறிப்பிட்டுவிடுவோம்.

ஆனால் இன்னமும் ஜப்பான் நாட்டில் கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தப்பட்டாலும் அவர் களுக்கென்ற பிரத்யோக நாட்காட்டி ஒன்று இருக்கிறது. அது அவர்களின் பேரரசரின் ஆட்சிக் காலத்துடன் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதுபோன்ற நாட்காட்டிகள் சீனா விலும் கொரியா வழியாக ஜப்பானுக்கு வந்ததாக குறிப்புகள் இருக்கின்றன.

கிபி 7ம் நூற்றாண்டில் இருந்து அப்போதைய அரசர்களின் சகாப்தத்துடன் இந்தநாட்காட்டிகள் இருக்கும்.

1873ம் ஆண்டு வரை ஜப்பான் நாடும் சூரிய சந்திர அடிப்படையிலான நாட்காட்டியை கொண்டு கணிக்கப்பட்டது.

1989ம் ஆண்டு இப்போதைய பேரரசர்  அக்கிகித்தோ பொறுப்பேற்றவுடன் அவர் காலம் Heisei  சகாப்தம் எனப்படுகிறது. ஆனால் இவருக்கான ஆட்சிக்காலம் ஏப்ரல் 30ம் தேதியோடு முடிவடைகிறது.‘

எனவே இவருக்குப் பின் புதிதாக வரும் பேரரசரின் சகாப்தம் இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. ஆனால் இது குறித்து ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ஜப்பான் நாட்டின் மிகபிரபலமான டோடன் நாட்காட்டி  நிறுவனத்தின் தலைவர் திரு. குனியோ குவாச்சி, ’’பேரரசர்களின் சகாப்தம் தெரிந்தால் நாளை காணிப்பது எளிது என்கிறார்

புதிய நாட்காட்டி இதற்கு மேல் அச்சாகவேண்டும் என்றாலும் புதிய  பேரரசரின்  சகாப்தம் தெரிந்தால்தான் அதை கணினியில், செல்பேசியில் மேம்படுத்தப்படவேண்டும்.

இது 2000 ல் கணினித்துறை சந்தித்த “Y2K” போன்று பிரச்னை வருமோ என்றும் யோசிக்கிறார்கள், ஆனால் மைக்சோசாப்ட் நிறுவனம் புதிய சகாப்தத்திற்கு ஏற்கனவே ஒரு சோதனை பதிப்பு ஒன்றினை கொடுத்துள்ளது.

மேலும் ஜாவா  டெவல்ப்மெண்ட் பிட் 11ல்  “元号”, “NewEra” என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.  ஜப்பான் அரசாங்கம் புதிய சகாப்தத்திற்கான பெயரை அறிவித்துவிட்டால் எல்லா நிறுவனங்களும் இதற்கான ஒத்திசைவை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

உலகமெங்கும் பொதுவாக உள்ள யுனிகோடு அமைப்பிலும்  U+32FF என்ற இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

-செல்வமுரளி