சென்னை
தமிழகத்தில் ஊதியம் அளிக்கும் தினம் நெருங்குவதால் 2 அல்லது 3 ஊழியர்களுக்குப் பணி புரியத் தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசு நாடெங்கும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளது. தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பணி புரிவோர் பணிக்குச் செல்லக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாத இறுதி என்பதால் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டியது உள்ளது. இந்த பணிக்காக சம்பளப்பட்டியல் தயாரிக்க ஊழியர்கள் பணி புரிய வேண்டியது உள்ளது. இதை ஒட்டி தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிவிட்ட்ரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், “மாத இறுதியில் சம்பளம் வழங்குவதை உறுதிசெய்ய, பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களின் சம்பள பட்டியலைத் தயாரிக்க,
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் 2 (அ) 3 ஊழியர்களுக்கு மட்டும் மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய 3 நாட்களில் மாவட்ட ஆட்சியர்கள், ஆணையர் மூலம் சிறப்பு அனுமதி” எனத் தெரிவித்துள்ளார்.