பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தில் எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷ்னல் மற்றும் ஐசிஐசிஐ  உள்ளிட்ட பிரதான வங்கிகள் இணைந்துள்ளன. புதிய வட்டி விகிதம் இன்றிலிருந்து செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வீடு மற்றும் வாகன கடன்கள் MCLR (நிதியை அடிப்படையாக கொண்ட கடன்) திட்டத்துடன் இணைக்கப்படுகின்றன. உயர்கடன்களின் மாத வட்டி விகிதமும் அதிகரிக்கும்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான எஸ்பிஐ கடந்த மூன்று ஆண்டுகளில் பத்து புள்ளிகள் அதிகரித்துள்ளன. இது இணையத்தில் 7.8 சதவிகிதத்தில் இருந்து 7.9 சதவிகிதமாகவும், நிதி சார்ந்த அடிப்படையில் மாதக்கடன் தொகை 8.35லிருந்து 8.45 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதே போன்று பஞ்சாப் நேஷ்னல் வங்கி கடந்த மூன்று மற்றும்  ஐந்து ஆண்டு திட்டங்களுக்கு  8.55 லிருந்து 8.7 சதவிகிதம் வரை வட்டி தொகையை உயர்த்தியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியும் பத்து ஆண்டுகளில் வட்டித்தொகையை 8.70சதவிகிதம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகா வங்கியும் தொடர்ந்து வட்டி விகிதத்தை 7.25 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.