டெல்லி: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் (வயது 95) உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்து உள்ளார்.
நாரிமன் மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். 22 ஆண்டுகள் பயிற்சி செய்த பிறகு, அவர் 1971 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஃபாலி நாரிமனுக்கு 1991 இல் பத்ம பூஷன் மற்றும் 2007 இல் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புகழ்பெற்ற சட்ட நிபுணரும் மூத்த வழக்கறிஞருமான ஃபாலி சாம் நாரிமன் ‘இந்தியப் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் 28வது நீதிபதி சுனந்தா பண்டாரே நினைவுச் சொற்பொழிவின் போது, பேசிய கருத்துக்கள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.