மும்பை

ங்கணா ரணாவத் இயக்கி நடிக்கும் எமர்ஜென்சி திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியீடு ஒத்தி வைக்கபட்டுள்ளது.

 

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘எமர்ஜென்சி’., இந்திரா காந்தியாக நடித்துள்ள கங்கனா ரனாவத் படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார்.

சென்ற ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு இப்படம் இன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. ஆயினும் தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சீக்கிய சமூகத்தினரைத் தவறாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்சையைத் தொடர்ந்து இப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. என்பதால்இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அதை நீக்கும்படியும் சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில்

‘நான் இயக்கிய எமர்ஜென்சி திரைப்படம் தள்ளிப்போவதை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன். தணிக்கை வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெற காத்திருக்கிறோம். விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். காத்திருப்புக்கும் புரிதலுக்கும் நன்றி ‘

என்று பதிவிட்டுள்ளார்.