நியூயார்க்: இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோளை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான எல்ன் மஸ்க்கின் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகர மாக விண்ணில் ஏவியது.
இஸ்ரோ தயாரித்துள்ள 4700 கிலோ எடை கொண்ட ஜிசாட் (20) N2 அதிநவீன செயற்கைக்கோள் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் ராக்கெட்டில் இருந்து பிரிந்த செயற்கைகோள், பின்னர் திட்டமிட்டபடி புவி சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தகவல் தொடர்பை மேம்படுத்துவதற்காக, ஜிசாட் 20 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் எடை 4,700 கிலோ. இதனை இஸ்ரோவுக்கு சொந்தமான ராக்கெட்டுகளால் விண்ணில் செலுத்துவது கடினமானது. இஸ்ரோவின் ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 4,100 கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்களை மட்டும் விண்ணில் செலுத்த முடியும் என்பதால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் ஜிசாட் N2 செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியை இஸ்ரோ நாடியது. அதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒத்துகொண்டது. இதையடுத்து ஜிசாட் N2 அதிநவீன செயற்கைக்கோள் அமெரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் N2 செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இஸ்ரோவிற்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக் கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இன்று (நவ.,19) அமெரிக்காவின் பு ளோரிடாவில், கேப் கேனரவல் ஏவுதளத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட், மூலம் ஜிசாட் 20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோளில் 32 பீம்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய சேவையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிசாட் N2 செயற்கைக் கோள் வர்த்தக முறையில் விண்ணில் செலுத்தப்படுவதால் இந்த திட்டத்திற்கு 500 முதல் 600 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும் இதன் ஆயுட்காலம் 14 ஆண்டுகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதில் உள்ள தகவல் தொடர்பு பேலோட் 14 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது.
செயற்கைக்கோள் செயல்பாட்டிற்கு வந்ததும் தொலைதூரப் பகுதிகளுக்கான இணைய இணைப்பை வழங்கும்.
இந்த செயற்கைக்கோளில் 32 பீம்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய சேவையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.