பிரபல இணையதளமான டிவிட்டரை முழுமையாக கைப்பற்றிய உலக பணக்காரரான எலன்மஸ்க் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே முக்கிய இந்திய அதிகாரிகள் 2 பேர் உள்பட 4 பேரை பதவி நீக்கம் செய்த நிலையில், தற்போது பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும்,  புளு டிக்குக்கு காசு பெறுவது தொடர்பாகவும் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிவிட்டர் நிறுவனத்தை கடந்த 27ந்தேதி முழுமையாக கைப்பற்றிய எலன்மஸ்க், உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்பட 4 உயர் அதிகாரிகளை  அதிரடியாக பணி நீக்கினார். இதையடுத்து ஏற்கனவே பராக் கூறியதுபோல, ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். தற்போது டிவிட்டர் நிறுவனத்தில்  7500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் சுமார் 75 சதவிகிதம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளத.

தற்போது டிவிட்டர் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷாக் டோர்சி உள்ளார். இவர் எலன் மஸ்கின் திட்டத்தின்படி, வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பான பட்டியலை தனக்கு அனுப்பி வைக்கும்படி, உலகம் முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களுக்கு சர்க்குலர் அனுப்ப உள்ளார்.  நவம்பர் 1ந்தேதி முதல் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் அமெரிக்க நாளிதழ்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

மேலும், டிவிட்டரின் வருமானத்தை அடுத்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் எதிரொலியாக 2ஆயிரம் பேர் மட்டுமே பணியில் இருந்தால் போதும் என முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், அதே வேளையில் டிவிட்டருக்கு மாற்றாக புதிய செயலியை விரைவில் அறிமுகப்படுத்த எலன்மஸ்க் திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு புளூஸ்கை என்று பெயரிடப்பட்டு இருப்பதாகவும் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரி ஷாக் டோர்சி  தெரிவித்து உள்ளார். இதுமட்டுமின்றி, தற்போது டிவிட்டரில் அனுப்பப்படும் செய்தியை பார்த்தற்கான அடையாளமாக காணப்படும்  புளுடிக்-ஐ, பணமாக்க முயற்சி செய்து வருவதாகவும், முதற்கட்டமாக வெரிபைடு கணக்காளர்களிடம் (சரிபார்க்கப்பட்ட டிவிட்டர் பயனர்கள்) அதற்கான பணம் வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 அதன்படி, புளுடிக் குறியீட்டுக்கு மாதம் 20 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.1600  வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து 3 மாதம் பணம் கட்ட தவறினால், அவர்களின் புளுடிக் பறிபோகும் என்றும், இதுதான் அவரது முதல் டாஸ்க் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.