ட்விட்டர் நிறுவனத்தை 3.40 லட்சம் கோடி ரூபாய்க்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.
நிர்வாகம் கைமாறி இருக்கும் நிலையில் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அது எந்த இலக்கை நோக்கி எந்த திசையில் பயணிக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து அண்மையில் கேள்வி எழுப்பிய மஸ்க், எடிட் பட்டன் குறித்தும் பேசியிருந்தார்.
இந்த நிலையில், ஊழியர் கூட்டத்தில் பேசிய தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் ‘‘ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. நிறுவனம் கைமாறி இருக்கும் நிலையில் அது எந்த திசையை நோக்கிச் செல்லும் என்று தெரியாது’’ என்று கூறியதாக செய்திகள் வெளியானது.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியிருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இவ்வாறு கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ட்விட்டர் ஊழியர்களுடன் எலான் மஸ்க் கலந்துரையாட இருப்பதாக அந்நிறுவனம் தனது ஊழியர்களிடம் தெரிவித்துள்ளது.