டெல்லி
எலான் மஸ்க் மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் எனக் கூறியதற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் மற்றும் டெஸ்லா நிருவனர் எலான் மஸ்ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பங்கள் மூலம் முறைகேடு செய்ய முடியும் என்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராக்ல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
”இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பது ஒரு கருப்புப்பெட்டி. இந்தியாவில் மின்னணு வாக்கு இயந்திரத்தை ஆராய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
நமது தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை குறித்து தீவிர கவலைகள் எழுப்பப்படுகின்றன. அமைப்புகள் பொறுப்பேற்க முடியாத நிலையில் ஜனநாயகம் ஏமாற்று நாடகமாக மாறி மோசடிக்கு ஆளாகிறது”
என்று பதிவிட்டுள்ளார்.